நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாசில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பூவிழி வாசலிலே. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் கார்த்திகா.

இந்த திரைப்படத்தில் அவ்வளவு பிரபலமாக விட்டாலும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான நாயகன் என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை என்றாலும் பல மலையாள திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

80களில் மலையாளத்தில் இருந்த டாப் நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவில் தொடர்ந்து சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு திருமணம் நடைபெற்றது.

Advertisement

கடந்த 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

1991 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகு இந்த தம்பதிக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற ஒரு மகன் உள்ளார்.

Advertisement

இவர் ஒரு கால்நடை மருத்துவர். இதனை தொடர்ந்து கார்த்திகா கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

 

Advertisement

பூஜா என்பவர் உடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது நடிகை கார்த்திகா தனது மகன் மற்றும் பேரனுடன் எடுத்துக்கொண்ட சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

இதனை பார்த்த ரசிகர்களும் அட இவராய் என ஆச்சரியமாக பார்த்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in