LATEST NEWS
பகீர்..! “நீ எனக்கு இல்லையென்றால் யாருக்கும் இல்லை” ஆசையாக அழைத்து சென்று அழைத்து நடுக்காட்டில் வைத்து.. காதலியின் கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்..!!
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, இரவு உணவிற்கு அழைத்துச் சென்று காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் உள்ள பைப்லைன் சாலையில் இந்தத் துயரச் சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. இக்கொலைச் சம்பவத்தில் அஞ்சலி (23) என்ற இளம் பெண் கழுத்தில் குத்தப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காதலன் ராஜீவை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட அஞ்சலியும், ராஜீவும் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஒரே இடத்தில் வேலை செய்தபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், ராஜீவ் குற்றப் பின்னணி கொண்டவராக இருந்ததால், அஞ்சலியின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் முடிவை ஏற்றுக்கொண்ட அஞ்சலி, கடந்த சில காலமாக ராஜீவை விட்டு விலகிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், ராஜீவ் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு சுமார் 8:30 மணியளவில், ராஜீவ் அஞ்சலியைப் பேசுவதற்காக பைப்லைன் சாலையில் உள்ள இடத்திற்கு இரவு உணவிற்கு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் திருமணப் பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. அஞ்சலி திருமணத்திற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜீவ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஞ்சலியின் கழுத்தில் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அஞ்சலியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக எம்.எஸ். ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
