வயித்துல வளருற குழந்தைக்கு DNA டெஸ்ட் எடு… கர்ப்பிணியை டார்ச்சர் செய்த கணவன், மாமியார்… கடைசியில் நடந்த சோகம்… கதறும் பெண்ணின் பெற்றோர்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வயித்துல வளருற குழந்தைக்கு DNA டெஸ்ட் எடு… கர்ப்பிணியை டார்ச்சர் செய்த கணவன், மாமியார்… கடைசியில் நடந்த சோகம்… கதறும் பெண்ணின் பெற்றோர்..!!!

Published

on

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கடி பெத்தபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ். இவருக்கும் சுஷ்மிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கிய நிலையில், சமீபத்தில் சுஷ்மிதா கர்ப்பமடைந்துள்ளார்.

சுஷ்மிதா கர்ப்பமானதைத் தொடர்ந்து, அவரது நடத்தையில் கணவர் அபிலாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும், பிறக்காத குழந்தைக்கு இப்போதே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சுஷ்மிதாவை அபிலாஷும் அவரது தாயாரும்  சேர்ந்து நாளுக்கு நாள் கடுமையான முறையில் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

Advertisement

கணவர் மற்றும் மாமியாரின் தொடர் சந்தேகத்தாலும், மன ரீதியான சித்ரவதையாலும் மிகுந்த மனமுடைந்த சுஷ்மிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுஷ்மிதாவின் தாயார் ஜனாபாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி சுஷ்மிதாவின் கணவர் அபிலாஷ் மற்றும் அவரது தாயாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in