LATEST NEWS
நடிகர் மம்மூட்டியின் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. துக்கத்தில் குடும்பத்தினர்…. திரையுலகினர் இரங்கல்….!!
மலையாள சினிமா திரை உலகில் இன்றும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் மம்மூட்டி. இவரின் ஒரே மகன் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் மற்ற நடிகர்களைப் போல கதையை தேர்வு செய்யாமல் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து அவரது ரசிகர்களை படத்தின் மூலம் பிரமிக்க வைத்து வருகின்றார். இவர் என்னதான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான் குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது நடிகர் மம்மூட்டியின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திரை உலகை மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
