முதல் முறையாக மகளின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி…. புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முறையாக மகளின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சமுத்திரக்கனி…. புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் சமுத்திரகனி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொலைக்காட்சி நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

அதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் வகையில் தான் அமைந்திருக்கும்.

Advertisement

இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் மற்றும் அப்பா என கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அதேசமயம் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில் கூட இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தன்னுடைய நடிப்பிற்கும் தான் இயக்கிய திரைப்படங்களுக்காகவும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். இப்படி பல புகழுக்குரிய சமுத்திரக்கனி ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஹரி விக்னேஸ்வரன் என்ற மகனும் ஷிவானி என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தனது குடும்பத்தை சினிமா பக்கம் காட்டாமல் இருக்கும் சமுத்திரக்கனி முதல் முறையாக தன்னுடைய மகளின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in