பல கோடி மதிப்பிலான கார்…. புதுமண தம்பதியை வாழ்த்த புது கெட்டப்பில் வந்த லெஜன்ட் சரவணன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பல கோடி மதிப்பிலான கார்…. புதுமண தம்பதியை வாழ்த்த புது கெட்டப்பில் வந்த லெஜன்ட் சரவணன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.

தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார்.

Advertisement

அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர். அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார்.

அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார். ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Advertisement

மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார்,பிரபு மற்றும் நாசர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீர்த்திகா திவாரியும் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது சரவணன் அருள் தனது இரண்டாவது படத்திற்காக தயாராகி வருகிறார்.

அந்தப் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த முடிவெடுத்து சரவணன் அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் விஜயின் லியோ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளியானது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் பல கோடி ரூபாய் மதிப்பிலான காரில் சென்று புதுவிதமான கெட்டப்பில் திருமணம் ஆன புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in