கோடை விடுமுறையை கொண்டாட… மனைவி, மகனுடன் ரயிலில் சென்ற நடிகர் பிரகாஷ்ராஜ்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!? – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோடை விடுமுறையை கொண்டாட… மனைவி, மகனுடன் ரயிலில் சென்ற நடிகர் பிரகாஷ்ராஜ்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!?

Published

on

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கி தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ்.

குணச்சித்திர வேதத்திலும் சரி வில்லன் கதாபாத்திரத்திலும் சரி இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

Advertisement

தமிழ் சினிமாவில் பல வில்லன் கதாபாத்திரங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதிலும் சட்டை என நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜின் முகம் தான்.

இவர் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.முதலில் பிரபுவுடன் இணைந்து டூயட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தன.

Advertisement

குறிப்பாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நடித்த இவருக்கு சப்போர்ட்டிங் நடிகருக்கான விருது கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் பலமுறை சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதையும் சிறந்த வில்லனுக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.

Advertisement

இவர் சமீபத்தில் வெளியான விருமன்,திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன்  திரைப்படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

இதனிடையே பிரகாஷ்ராஜ் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா மற்றும் மேக்னா என்ற இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார்.

Advertisement

கடந்த 2004 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் மகன் உயிரிழந்து விட்டார்.அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு தனது மனைவியையும் இவர் விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பொன்னி வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந் என்ற ஒரு மகனும் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் அதனை கொண்டாட தனது மனைவி மற்றும் மகனுடன் பிரகாஷ்ராஜ் ரயிலில் பயணம் சென்றுள்ளார். சுற்றுலா சென்ற புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in