LATEST NEWS
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கல்வி தகுதி என்ன தெரியுமா?…. இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதே சமயம் ரசிகர்கள் அனைவரும் அவ்வப்போது தங்களின் ஃபேவரேட் ஹீரோ குறித்த பல தகவல்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் கல்வித் தகுதி என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கமல்ஹாசன்:
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பின் மீது அதிக காதல் கொண்டவர். அதனால் தன்னுடைய படிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டார். உயர்கல்வி மட்டுமே படித்துள்ள இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சத்தியபாமா டீம்ட் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தன்னுடைய கடின உழைப்பால் படிக்காமல் முன்னேறிய முன்னணி நடிகர்தான் கமல்ஹாசன்.
ரஜினிகாந்த்:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினி நடிப்பில் தற்போதுஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் 12 ஆம் வகுப்புக்கு பிறகு எதையும் படிக்கவில்லை. பின்னர் இவர் 1973 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டியில் தனது சினிமா படிப்பை முடித்துள்ளார்.
விஜய்:
முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பால லோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் சென்னை லயோலா கல்லூரியிலும் இளங்கலை பட்டம்(Visual communication) படித்தார்.
விஜய் சேதுபதி:
தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சென்னை துறைப்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் பெய்ட் செயின் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
தனுஷ்:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் சென்னையில் உள்ள சாய் சத்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி பயன்பாட்டியலில் தொலைதூரக் கல்வி மூலம் BCA பட்டம் பெற்றுள்ளார்.
சூர்யா:
சிறந்த நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் பிகாம் பட்டம் பெற்றுள்ளார். காமர்ஸ் படித்தவர்கள் பட்டய நிதி ஆய்வாளர்,பொது கணக்காளர் மற்றும் தனிப்பட்ட நிதி ஆலோசகர் என்று பல்வேறு பதவிகளில் பணிபுரியலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பத்தாம் வகுப்புக்கு பிறகு பள்ளி படிப்பை பாதையில் நிறுத்திவிட்டார். கமலை போலவே பட்டங்களும் சான்றிதழ்களும் பெறாமல் தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகராக நிற்கிறார்.
நடிகர் கார்த்தி:
சூர்யாவின் உடன்பிறந்த தம்பியான கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சென்னை கிராசண்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் முதுகலை அறிவியல் படிப்பை முடித்துள்ளார்.
விக்ரம்:
முன்னணி நடிகரான சீயான் விக்ரம் லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது இவர் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்:
முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் பள்ளி படிப்பை கேம்பியன் ஆங்கிலம் இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் திருச்சிராப்பள்ளியில் முடித்தார். பிறகு பி டேக் மற்றும் எம்பிஏ பட்டத்தை ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முடித்தார்.
ஜெயம் ரவி:
சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பரதநாட்டிய நடன கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்ற இவர் தன்னுடைய 12 வயதில் அரங்கேற்றம் செய்தார்.
