LATEST NEWS
கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாடிய புகைப்படங்களை வெளியிட்ட… அருவி பட நடிகை அதிதி பாலன்….!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் முதன்முதலாக அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார்.
ஆனால் அருவி திரைப்படம் மூலம் தான் நல்ல அறிமுகத்தை பெற்ற இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதன் பிறகு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது சகுந்தலம் என்ற திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவ்வாறு அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது கல்லூரி படிக்கும் போது கால் பந்து விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டு பழைய நினைவுகளை அதிதி பாலன் மீண்டும் நினைவுகூர்ந்து உள்ளார்.
புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை அதிதி பாலனா இது என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
