பிரம்மாண்டமாக மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ஆர் ஜே விஜய்…. வெளியான க்யூட் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ஆர் ஜே விஜய்…. வெளியான க்யூட் புகைப்படங்கள்….!!!

Published

on

ரேடியோ ஜாக்கியியாக இருந்து அதன் பிறகு சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் விஜே விஜய்.

இவர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உட்பட பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல பட்டிமன்றங்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

ரேடியோ மிர்ச்சி எஃப்எம் சேனலில் ஆர் ஜே வாக இருந்து வந்து பலருக்கும் பரிச்சயமான குரல் என்றால் அது விஜயின் குரல் தான். மிர்ச்சி விஜய் பிறகு தொலைக்காட்சியிலும் கலக்கினார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜேவாக கலக்கினார். டான்ஸ் ஜோடி டான்ஸ் இவரது ஆங்கரிங் ஸ்டைலில் பலருக்கும் பிடித்தது.

Advertisement

அதன் பிறகு இவர் பல்வேறு விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றினார். சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழ் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் இவர் தொகுப்பாளராக பணியாற்றினார்.

ஆர் ஜே விஜய் சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

ஏற்கனவே இவர் தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோனிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இரண்டு வருடங்களாக காதலித்து வந்த மோனிகா என்ற பெண்ணை விஜய் இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா மற்றும் சினேகா உள்ளிட்ட பல நடிகர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நவிலன் என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது விஜே விஜய் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in