சிம்பு ஸ்டைலில் ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிம்பு ஸ்டைலில் ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

இவர் பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.

பின்னர் 5 வருடங்களாக தமிழ் சினிமாவில் விலகி இருந்த இவர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஆனால் இளம் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ஆறு வருடங்களில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Advertisement

இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர் இறுதியாக அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

தற்போது இவருக்கு படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று தனது 26 வது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அதேசமயம் ரசிகர்களுடனும் உரையாடிய நிலையில் அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.ரசிகர்களுக்கு உணவு வழங்கியும் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

Advertisement

சமீபத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பிரியாணி வழங்கிய நிலையில் தற்போது இவரும் அதனைப் போலவே தனது பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு உணவு பரிமாறி உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in