தமிழ் சினிமாவில் கலக்கிய வெளிநாட்டு நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் கலக்கிய வெளிநாட்டு நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் பலரும் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் வெளிநாட்டு நடிகர்களும் நடித்திருப்பதை நாம் பலரும் அறிந்தது தான். சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் க்கு ஜோடியாக ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் ஒலிவியா மோரிஸ் என்ற ஹாலிவுட் நடிகை நடித்திருந்தார். அதனைப் போலவே தமிழ் படங்களில் நடித்த வெளிநாட்டு நடிகர்களின் விவரத்தை இதில் பார்க்கலாம்.

Danny Sapani:

Advertisement

ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டை சேர்ந்த இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் நடிப்பு கற்றுக் கொண்ட இவர் பிரிட்டிஷ் டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார். இவர் சிங்கம் 2 திரைப்படத்தில் நைஜீரியாவை சேர்ந்த போதை மருந்து கடத்தும் சர்வதேச கேங்ஸ்டாராக நடித்திருப்பார்.

Bentley Mitchum:

Advertisement

சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் உருவான லிட்டில் ஜான் திரைப்படத்தில் அமெரிக்க நடிகர் பென்ட்லி மிட்சமை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் ராபர்ட் மிட்சம் என்ற புகழ்பெற்ற அமெரிக்க நடிகரின் பேரன். இவர் பல அமெரிக்க திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

எமி ஜாக்சன்:

Advertisement

லண்டனை சேர்ந்த இவர் தன்னுடைய இளம் பருவத்தில் மாடலிங்கில் கவனம் செலுத்தினார். இவர் இயக்குனர் விஜய் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படத்தில் துரை அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி வெர்ஷனில், தாண்டவம், தங்க மகன் மற்றும் தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

Nathan Jones:

Advertisement

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் ஜோன்ஸ் பூலோகம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இவரை இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இந்த திரைப்படத்தில் ஸ்டீபன் ஜார்ஜ் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார்.

Roland Kickinger:

Advertisement

பேராண்மை திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியை மட்டுமல்லாமல் படம் பார்க்கும் அனைவரையும் மிரட்டியவர் தான் இவர். ஆண்டர்சன் என்ற கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் ஒரு பாடி பில்டர். இவர் அமெரிக்க டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

Johnny:

Advertisement

வியட்நாம் நாட்டில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரான இவர் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் ஸ்டன்ட் மேன் ஆக பணியாற்றியுள்ளார். இவர் ஏழாம் அறிவு திரைப்படத்தில் டாங்கிலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து இரும்பு குதிரை திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Andreanne nouyrigat:

Advertisement

பிரான்சில் பிறந்து பாண்டிச்சேரியில் சில காலம் வாழ்ந்த இவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்பினார். பிரெஞ்சு மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். ஜீரோ திரைப்படத்திலும் பேயாக நடித்திருந்தார்.

சன்னி லியோன்:

Advertisement

கனேடிய நாட்டை சேர்ந்த இவர் ஜெய் நடித்த வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பாக தோற்றத்தில் நடனமாடி தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in