LATEST NEWS
இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை திரிஷா…. இவரின் முழு சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடி தெரியுமா….??
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இளவரசி குந்தவை ஆக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். தற்போது அவர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று திரிஷா தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 40 வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு மற்றும் புது படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி பொன்னீர் செல்வன் படத்தில் நடிப்பதற்காக இவர் மூன்று கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதனைப் போலவே விஜய் உடன் ரியோ படத்தில் நடிக்கவும் நான்கு கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாதம் 60 லட்சம், ஆண்டுக்கு 9 கோடி வரை திரிஷா விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலமாக சம்பாதித்து வருகிறார்.
சென்னையில் 6 கோடி மதிப்பிலான சொந்த வீடு, ஹைதராபாத்தில் ஒரு வீடு மட்டும் ரியல் எஸ்டேட் மூலம் சம்பாதித்து வருகிறார். அதே சமயம் 60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், 63 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ், 40 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார்கள் திரிஷாவிடம் உள்ளன. இதை வைத்து பார்க்கும் போது நடிகை திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு 70 முதல் 80 கோடி வரை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
