இது என்னடா புதுசா இருக்கு?…. 18 வயது குமரி முதல் 105 வயது பாட்டி வரை டேட்டிங் சென்ற தமிழ் நடிகர்…. இப்படி ஒரு காரணமா?… வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது என்னடா புதுசா இருக்கு?…. 18 வயது குமரி முதல் 105 வயது பாட்டி வரை டேட்டிங் சென்ற தமிழ் நடிகர்…. இப்படி ஒரு காரணமா?… வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

தென்னிந்திய சினிமா நடிகர்கள் பலரும் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பலரும் அறிந்த ஒன்றுதான்.

அதிலும் ஒரு சிலர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் சிங்கிளாகவே இருந்து வருகின்றனர்.

Advertisement

ஆனால் பிரபல நடிகரான சுந்தர் ராமு விவாகரத்து பெற்ற பிறகு பல பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயணித்து இதுவரை சுமார் 335 பெண்களோடு டேட்டிங் சென்றுள்ளார்.

அதுவும் இளம் வயது பெண் முதல் பாட்டி வரை இவர் டேட்டிங் சென்றுள்ளது தான் பலரையும் வியக்க வைக்கிறது.

Advertisement

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் சுந்தர் ராமு.

அந்த திரைப்படத்திற்கு பிறகு 3, நான் சிகப்பு மனிதன் மற்றும் மனிதன் போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

Advertisement

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் 105 வயது பாட்டி, தன்னுடைய அப்பார்ட்மெண்ட் பிளாக்கில் இருந்து குப்பை சேகரிக்கும் ஒரு பெண், 95 வயதில் ஒரு அயர்லாந்தை சேர்ந்த கன்னியாஸ்திரி, நடிகை, மாடல்கள் என இதுவரை 335 பெண்களோடு இவர் டேட்டிங் சென்றுள்ளார்.

ஆனாலும் வருடத்தில் 365 நாட்களும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பெண்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்பதுதான் இவரின் இலக்காகும்.

Advertisement

இப்படி ஒரு வித்தியாசமான குறிக்கோளை கொண்டுள்ள இவர் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி 365 டேட்டிங் திட்டத்தை பேஸ்புக் மூலம் அறிவித்த இவர் பெண்கள் என்னிடம் வெளியே வருகிறீர்களா என்று கேட்க வேண்டும், திட்டமிட வேண்டும், உணவிற்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது சமைக்க வேண்டும்.

Advertisement

உணவில் சேமித்த பணத்தை அதிகம் வெளியே தெரியாத தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் வழங்கப் போவதாக இவர் கூறியிருந்தார்.

மேலும் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வரும் பாலியல் கொடுமைகளை தடுக்கவும் தான் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டு உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

அதேசமயம் 365 நாட்கள் செல்ல வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்த காரணத்தால் டேட்டிங் செல்லும்போது உங்களை மற்ற பாலினத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள் அவர்களின் பிரச்சனையை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் டெல்லி கும்பல் பலாத்கார சம்பவம் தன்னை உலுக்கிய நிலையில் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் 365 நாட்கள் டேட்டிங் என்ற யோசனை வந்ததாக அவர் கூறியுள்ளார்.

Advertisement

தற்போது அவர் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in