அமெரிக்காவில் உள்ள நெப்போலியன் வீட்டிற்கு சென்ற நடிகை குஷ்பு…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமெரிக்காவில் உள்ள நெப்போலியன் வீட்டிற்கு சென்ற நடிகை குஷ்பு…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ.

இவர் தென்னிந்திய மொழிகளை தாண்டி இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீப காலமாக இவர் அதிக அளவு படங்களில் நடிப்பதில்லை. இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் நடித்ததாக கூறப்பட்ட நிலையில் இவர் நடித்த காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

இதனிடையே நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ அடிக்கடி வெளியூர் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

சமீபகாலமாகவே இவர் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வரும் நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நெப்போலியன் தனது மகனின் சிறிய நோய் பாதிப்பால் சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement

அங்கு ஒரு பக்கம் விவசாயமும் மறுபக்கம் மிகப்பெரிய IT நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இப்படியான நிலையில் நடிகை குஷ்பூ அமெரிக்கா சென்று உள்ள நிலையில் நெப்போலியன் குடும்பத்தை நேரில் சந்தித்துள்ளார். அவரின் வீட்டிற்குச் சென்று பல புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in