என்னது மீண்டும் திருமணமா?…. சீரியல் பிரபலம் மதன் – ரேஷ்மா தம்பதியினர் பகிர்ந்த லேட்டஸ்ட் திருமண புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது மீண்டும் திருமணமா?…. சீரியல் பிரபலம் மதன் – ரேஷ்மா தம்பதியினர் பகிர்ந்த லேட்டஸ்ட் திருமண புகைப்படங்கள்….!!!!

Published

on

சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேஷ்மா.

இவர் அதே சேனலில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

Advertisement

அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன். இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Advertisement

இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள்.

பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவியது. அதனை அவர்களும் உறுதி செய்தனர்.

Advertisement

இவர்களின் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வர, அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான அபி டெய்லர் என்ற சீரியலில் ஜோடியாக நடித்தனர்.

Advertisement

சிறிது காலம் மட்டுமே ஓடிய அந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்தது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதன் ரேஷ்மா தம்பதியினர் அடிக்கடி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

சமீபத்தில் கூட தனது காதல் மனைவி ரேஷ்மாவின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய புகைப்படங்களை மதன் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

தற்போது இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது போல ஒரு வீடியோவை மதன் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவும் அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in