மீண்டும் இயல்பு நிலமைக்கு திரும்பிய நடிகர் ரோபோ சங்கர்…. வைரலாகும் லேட்டஸ்ட் நடன வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் இயல்பு நிலமைக்கு திரும்பிய நடிகர் ரோபோ சங்கர்…. வைரலாகும் லேட்டஸ்ட் நடன வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர்.இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறினார்.

முதன்முதலாக ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் ரோபோ சங்கர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். அவரின் தற்போதைய தோற்றத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மதுரை முத்து ரோபோ சங்கர் நடனமாடியதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் ரோபோ சங்கர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் எனக் கூறி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Madurai Muthu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mathuraimuthuofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in