LATEST NEWS
க்யூட்டான லுக்கில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வாத்தி பட நடிகை…. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். முதன்முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற திரைப்படத்தில் மலையாள மொழியில் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு தி வண்டி திரைப்படத்தில் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு கலர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் கிருஷ்ணாவின் தங்கையாக இவர் நடித்துள்ளார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தன. பிறகு 2019 ஆம் ஆண்டு ஜூலை காற்றில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தில்நடித்திருந்தார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது க்யூட்டான நோக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
