LATEST NEWS
9 வருடங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்த நிலையில்… வளைகாப்பு வீடியோவை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்….!!!
சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய பலரும் தற்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்துள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஜோடி சேர்ந்தவர்கள் தான் செந்தில் மற்றும் ஸ்ரீ பூஜா. கேரளாவில் பிறந்த ஸ்ரீ பூஜா கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இவர் இதுவரை 40க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக இவருக்கு நல்ல பெயரை தேடி தந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இதில் ஜோடியாக நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீ பூஜா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.முதலில் தாங்கள் நண்பர்கள் என்று கூறி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக செந்தில் அறிவித்திருந்த நிலையில் 9 வருடங்களுக்குப் பிறகு செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் செந்தில் வளைகாப்பு நடந்தபோது எடுத்த வீடியோவை தற்போதுவெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
