LATEST NEWS
ஸ்கூல் படிக்கும்போதே இப்படியா?…. காதல் கடிதம் எழுதி அடி உதை வாங்கிய சாய்பல்லவி…. அவரே பகிர்ந்த சம்பவம்….!!!
தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும் பலர் அவரை மலர் டீச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சாய்பல்லவி தான் காதல் கடிதம் எழுதி சிக்கிக்கொண்டது குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். 7 ஆம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படிக்கும் ஒரு பையன் மீது சாய்பல்லவிக்கு அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதைக் கொடுத்த தைரியம் இல்லாமல் தன்னுடைய புத்தகத்திலேயே வைத்து விட்டார். அதனை சாய் பல்லவியின் அம்மா பார்த்ததால் தனது அம்மாவிடம் சாய்பல்லவி அடி உதை வாங்கியுள்ளார். அதன் பிறகு அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு வேறு எந்த தவறும் செய்யவே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
