தந்தையின் பிறந்த நாளுக்கு வேற லெவலில்…. சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்…. வெளியான புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தந்தையின் பிறந்த நாளுக்கு வேற லெவலில்…. சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்…. வெளியான புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கண்மணி மனோகரன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

Advertisement

தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.

சிறுவயதில் இருந்து தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது எனவும் ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு ஆசை இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

Advertisement

காலம் போன போக்கில் பயணித்துக் கொண்டே இருந்த அவருக்கு மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் அதில் நுழைந்தபோது நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய பிறகு ஜீ தமிழில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதன்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் ஒரு தைரியமான குடும்ப பெண்ணாக இவர் நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

இதனிடையே இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் உள்ளனர். இந்நிலையில் நடிகை கண்மணி மனோகரன் தனது தந்தையின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

Advertisement

தனது தந்தைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sweety இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kanmani_manoharan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in