LATEST NEWS
பிக்பாஸ் பிரபலங்களுடன் அவுட்டிங்…. நடுக்காட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரச்சிதா….!!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.
சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார். இவர் இன்ஸ்டால் பக்கம் மட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார்.
இன்று ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது பிக் பாஸ் நண்பர்களான மகேஸ்வரி, ஷிவின், ஏ டி கே போன்றவர்களுடன் நடுக்காட்டில் அவர் ஜாலியாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
