LATEST NEWS
தமிழ் சினிமாவில் பெண் வேடத்தில் கலக்கிய நடிகர்கள் யார் யார் தெரியுமா?…. இதோ சிறப்பு தொகுப்பு…!!
பொதுவாகவே நடிகர்கள் என்றால் அனைத்து வேடங்களிலும் நடிக்கும் போது தான் அது முழுமை அடைகின்றது. அதுபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் சில திரைப்படங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் பெண் வேடமிட்டு நடித்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் விஷால்
அவன் இவன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷால் பெண் வேடமிட்டு ஒரு பாடலில் நடனமாடி இருப்பார். அதில் அவர் பார்ப்பதற்கு நிஜப் பெண் போலவே தோற்றத்தில் இருப்பார்.
நடிகர் சரத்குமார்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு காஞ்சனா திரைப்படத்தில் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பெண் வேடமிட்டு திருநங்கை போல அவர் நடித்திருப்பார்.
நடிகர் சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் குழந்தைகளின் பேவரட் ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நிஜத்தில் பெண் போலவே காட்சியளிப்பார்.
நடிகர் ரஜினிகாந்த்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பணக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலில் பெண் வேடமிட்டு நடனமாடி இருப்பார். அந்த வேடம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியது.
நடிகர் விஜய்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடலில் பெண் வேடமிட்டு நடனமாடி இருப்பார்.
நடிகர் விக்ரம்:
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர்களில் ஒருவர்தான் விக்ரம். கந்தசாமி திரைப்படத்தில் ஒரு காட்சியில் இவர் பெண் வேடமிட்டு அழகாக நடித்திருப்பார்.
நடிகர் கமல்ஹாசன்:
நடிப்பு என்றாலே அதற்கு கமல் தான் அர்த்தம். சிறு வயது முதலே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் பல வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவ்வை சண்முகி திரைப்படத்தில் இவர் போட்ட பெண் வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விஜய் சேதுபதி:
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கும் விஜய் சேதுபதி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பலவிதமான பழங்களில் பலவிதமான கெட்டப்பில் நடித்துள்ளார். அவ்வகையில் பெண் வேடத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
எம்ஜிஆர்:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவர் காதல் வாகனம் என்ற திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்து அச்சு அசல் பெண் போலவே காட்சியளித்திருப்பார்.
நடிகர் விவேக்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் விவேக். இவர் முரட்டுக்காளை என்ற திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்த அசத்து இருப்பார்.
நடிகர் சூர்யா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா நடிப்பிற்காக தனது உடலை மிகவும் வருத்திக் கொள்ளும் நடிகர்களில் ஒருவர். இவர் அயன் திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்த அசத்து இருப்பார்.
மொட்டை ராஜேந்திரன்:
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவரான மொட்டை ராஜேந்திரன் திருடன் போலீஸ் என்ற திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்த அசத்து இருப்பார்.
நடிகர் பிரசாந்த்:
தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் பிரசாந்த் ஆணழகன் என்ற திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
நடிகர் சதிஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான சதிஷ் பல திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் ஒரு திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்திருப்பார்.
