கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த சந்திரலேகா சீரியல் நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து…!!!

Published

on

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சந்திரலேகா சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்தான் சீரியலில் சந்திரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்வேதா.

இவர் சென்னையில் உள்ள பிரபல பி எம் ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்துள்ளார். இவர் சில விளம்பர படங்களில் நடித்து வந்து அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்து அசத்தார்.

Advertisement

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்துள்ளார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம் திரைப்படத்திலும் நடித்திருந்த இவர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளர் மால் முருகனை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்வேதா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in