LATEST NEWS
காதல் மனைவி இல்லாமல் தனியாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்ற விக்னேஷ் சிவன்…. வெளியான புகைப்படம்…!!!
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 2023 பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா தற்போது தொடங்கியுள்ளது. இந்த வருடம் நடைபெறும் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் வருகை தர உள்ளனர். இந்த விழாவில் வருகை தரும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்படும். இந்நிலையில் இந்த விழாவிற்கு விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக சென்றுள்ளது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
எங்கு சென்றாலும் தன்னுடைய காதல் மனைவி நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது விக்கி தனியாக எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிகிறது. தற்போது விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
