பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் சற்றுமுன் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் சற்றுமுன் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

Published

on

பிரபல நடிகர் சரத்பாபு உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன.

கடந்த சில வாரங்களாக அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் காலமானார். 72 வயதான இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

குறிப்பாக தமிழில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர். அதேசமயம் ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த இவர் உடல்நல குறைவால் இன்று காலமான நிலையில் இவரின் மறைவு திரை உலகிநர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரின் இறுதி சடங்கு சென்னை தி.நகரில் அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in