LATEST NEWS
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை கொண்டாடிய திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!!
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதலாவது தகுதி சுற்று நடைபெற்றது. அதில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ்க் வென்ற குஜராத் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஏழு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக களத்தில் இறங்கிய குஜராத் தனி 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி ஆட்டத்தை தொடங்கியது.
இறுதியாக இருவது ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்தது.
அடுத்ததாக சென்னை அணி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குவாலிபயர் கோயில் வெற்றியை ருசிக்கும் மனைவி உடன் மோதும்.
இதனிடையே ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சினிமா பிரபலங்கள் பலரும் போட்டிகளை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒவ்வொரு முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது திரை பிரபலங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா என பிரபலங்கள் பலரும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை நடிகர் சதீஷ், ஹரிஷ் கல்யாண், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை சிம்ரன், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கொண்டாடினர்
அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
