மறைந்த பிரபல முன்னணி நடிகர் சரத் பாபுவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த பிரபல முன்னணி நடிகர் சரத் பாபுவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு…

Published

on

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத் பாபு. இவர் ஜூலை 31ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நிழல்கள் நிஜமாகிறது’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் பட்டின பிரவசம், முள்ளும் மலரும் ,நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், சரணம் ஐயப்பா, நெற்றிக்கண், சட்டம், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் இதி கத காடு ,குப்பெடு மனசு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம். இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமலஹாசன், சிவாஜி போன்ற  முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் சரத் பாபு 1981 ஆம் ஆண்டு ரமா பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இருவரின் மன வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

Advertisement

நடிகை ரமா பிரபா அன்புக்கு நான் அடிமை, 47 நாட்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘கலகலப்பு 2’ படத்திலும் பாட்டியாக நடித்திருப்பார்.

சிறிது காலத்திற்குப் பிறகு நடிகர் சரத் பாபு வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை 1990 இல் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

பிறகு இருவரின் மனவருத்தத்தின் காரணமாக 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். தற்போது இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல்  உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன கடந்த சில வாரங்களாக அவரையும் உடல்நிலை மிகவும்  இருப்பதாக மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் .

Advertisement

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மே 22 ஆம் தேதி  உயிரிழந்தார் .தற்போது இவரின் பலரும் பார்த்திடாத  புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in