நடிகை சாய் பல்லவியின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின்  தொகுப்பு…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சாய் பல்லவியின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின்  தொகுப்பு….

Published

on

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சாய் பல்லவி. இவர் நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.தந்தை செந்தாமரை கண்ணன் தாய் ராதா இவருக்கு பூஜா என்ற ஒரு தங்கையும் உள்ளார்.

இவர் கோயம்புத்தூரில் உள்ள அவிலா பெண்கள் கான்வென்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.திபிலிசி மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தார் .இவர் பள்ளி படிக்கும்போதே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.தன் தாயின் ஆதரவோடு 2008 ஆம் ஆண்டு  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ என்ற  நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

Advertisement

அதை தொடர்ந்து ETV என்ற  தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தி அல்டிமேட் டான்ஸ் என்ற  நிகழ்ச்சியில்  பங்கு பெற்றார். நடிகை சாய்பல்லவி பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கஸ்தூரிமான்’ படத்திலும்,நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகை சாய்பல்லவி  ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு பெற்றது.

Advertisement

அதை தொடர்ந்து இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கரு ‘என்ற திரைப்படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் ,பாராட்டையும் பெற்றார்.இப்படத்தின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவர்  தமிழில் என் ஜி கே ,கார்த்தி போன்ற  படங்களில்  நடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, ஜார்ஜி ,தெலுங்கு போன்ற மொழிகளை சரளமாக பேசக் கூடியவர். தற்போது  நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவரின் பலரும் பாத்திடாத புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in