எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்….!!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Advertisement

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹரிப்பிரியா.

Advertisement

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரை இசை என்றால் தான் பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு பிரியமானவள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஹரிப்பிரியா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் நடித்தார். பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற சீரியலில் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார். இப்படி சீரியலில் பிஸியான நடிகையான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆனால் சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

பிரிவிற்குப் பிறகு ஹரிப்பிரியா தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

Advertisement

தற்போது இவர் தொகுப்பாளர் மற்றும் நடிகை என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஹரிப்பிரியாவின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in