LATEST NEWS
அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் எங்களுக்குள் சண்டை…. மகாலட்சுமி பற்றி மனம்திறந்த ரவீந்தர்…!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில் ரவிந்தர் தனியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் ஒரு சோகமான பதிவை பகிர்ந்து இருந்த நிலையில் அதனை பார்த்த பலரும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி பிரிந்து விட்டதாக கூறி பல பதிவுகளை பகிர்ந்தனர். ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் மகாலட்சுமி இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ரவீந்தர் அம்மாவுக்கும் மகாலட்சுமிக்கும் பிரச்சனை என புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதற்கு ரவீந்தர் விளக்கம் அளித்துள்ளார். அம்மாவுடன் பிரச்சனை வந்தால் அதனை மகாலட்சுமி சகித்துக் கொள்வார். ஆனால் அவருக்கு பொசசிவ் குணம் அதிகம் உள்ளது. அவருடைய தோழிகள் என்னிடம் பேசினால் கோபப்படுவாள். அந்த ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் சண்டையே தவிர மற்ற சண்டைகள் அப்படி வந்து இப்படி போய்விடும் என்று ரவீந்தர் கூறி அனைத்து வதந்திகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
