மகளுக்காக விவாகரத்து முடிவை மாற்றிய தொகுப்பாளினி அர்ச்சனா…. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகளுக்காக விவாகரத்து முடிவை மாற்றிய தொகுப்பாளினி அர்ச்சனா…. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்….!!

Published

on

90களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அவ்வகையில் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக இருந்து வந்த அர்ச்சனா நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

அதன் பிறகு இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உருவானது. அவ்வாறு தொடர்ந்து தொகுப்பாளனி பணியை செய்து வந்த அர்ச்சனா கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதனால் தொலைக்காட்சியில் இருந்து விலகிய அர்ச்சனா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகம என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ என்ட்ரி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து இவரின் மகள் சாராவும் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இதனிடையே அர்ச்சனா சில காரணத்தால் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் அதன் பிறகு தனது மகளால் அந்த முடிவை கைவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அப்படி கூறிய அர்ச்சனா தற்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ARCHANA CHANDHOKE fan page இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vj_archana_fans)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in