LATEST NEWS
சைலன்ட்டாக திருமணத்தை முடித்த எங்கேயும் எப்போதும் பல நடிகர் சர்வானந்த்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சர்வானந்த். இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதன்படி தமிழில் முதன் முதலாக காதல்னா சும்மா இல்லை என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றது.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு சுமார் நான்கு வருடங்கள் கழித்து சேரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் 7 வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு தனம் என்ற டைம் டிராவல் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி ஆனார்.
அந்த திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான நிலையில் அதில் நடிகை அமலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சர்வானந்திற்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அவர் தனது நீண்ட நாள் காதலியான ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவர்களின் நிச்சயதார்த்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் ஆகியும் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் திருமணம் நின்று விட்டதாக பல செய்திகள் இணையத்தில் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்வானந்த் குடும்பம் உடனடியாக திருமண தேதியை அறிவித்தது.
அதன்படி ஜூன் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சர்வானந்த் திடீரென கார் விபத்தில் கலந்த வாரம் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து இவரின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் திருமணம் நடைபெற்ற நிலையில் இவரின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதாவது நடிகர் ராம் சரண், சித்தார்த் மற்றும் தயாரிப்பாளர் வம்சை உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
தற்போது சர்வானந்த் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
