LATEST NEWS
பழமையான நகையை அணிந்து தங்கம் போல் ஜொலிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…
இயக்குனர் கே ஆர் சந்துரு இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘போதை ஏறி போச்சு புத்தி மாறி’.இப்படத்தில் தீரஜ்,பிரசாத்,ராதா ரவி,’மைம்’ கோபி,சார்லி,பிரதானி சர்வா,துஷாரா விஜயன்,மீரா மிதுன்,சுவாமிநாதன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். இதைத்தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தற்போது இவர் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங்கம் செய்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 262K followers உள்ளனர். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நகை விளம்பரத்தில் நடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
