திருமண நாளில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமண நாளில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன்…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!

Published

on

தமிழகத்தை சேர்ந்த பிரபலமான இந்திய கிரிக்கெட் அணி வீரர்தான் நடராஜன். இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து தனது யாக்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

 

Advertisement

இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியில் நெட் பௌலராக இடம் பிடித்தார்.

 

Advertisement

அதன் பிறகு பிரதான வீரர்களில் ஒருவராக இடம் பிடித்த இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார். குறிப்பாக இவரின் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

Advertisement

அதன் பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்த இவர் முழங்கால் காயம் காரணமாக 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார்.

இவர் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு நடராஜன் தனது கிராமத்தில் தனது பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை தொடங்கினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடராஜன் தனது பெயரில் கிரிக்கெட் அகாடமியை சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் தொடங்கியுள்ளார்.

 

Advertisement

தற்போது அந்த மைதானத்தில் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட்டில் நுழைந்த சில நாட்களிலேயே தனது பந்துவீச்சு திறமையால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.

இதனிடையே இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடராஜன் தனது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in