காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை சரண்யா நாக்-ஆ இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை சரண்யா நாக்-ஆ இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே….!!!

Published

on

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காதல். இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சந்தியா.

இந்த திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக்.

Advertisement

 

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார்.

Advertisement

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு துல்லுற வயது என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

அதே சமயம் ஒரு வார்த்தை பேசு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி இருந்தார். ஆனால் சில காரணங்கள் எல்லாம் அந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டென்த் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இருந்தாலும் அந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்த சரண்யா 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் இறுதியாக கலந்த 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்புமும் கிடைக்காத நிலையில் ஒரு சில குறும்படங்களில் நடித்திருந்தார்.

Advertisement

சிறிது காலம் இவர் எங்கு இருக்கிறார் எப்படி உள்ளார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

அந்த புகைப்படத்தில் அவர் முன்பு பார்த்தது போல் இல்லாமல் தற்போது உடல் எடை கூறி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in