பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் கணவர்கள்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் கணவர்கள்….

Published

on

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ள தொகுப்பாளினிகளின் கணவர் பற்றி இதில் காண்போம்

1.பிரியங்கா:

Advertisement

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர்தொகுப்பாளினி  பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்,  ராஜு வீட்ல பார்ட்டி , பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். தொகுப்பாளினி பிரியங்கா  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2.பாவனா:

Advertisement

விஜய் டிவியில் பிரபலமான முன்னணி  தொகுப்பாளினி பாவனா.  இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.’ சூப்பர் சிங்கர்’  போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொகுப்பாளினி பாவனா மும்பையைச் சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

3.ரம்யா:

Advertisement

விஜய் டிவியில் பிரபலமான முன்னணி  தொகுப்பாளினி ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா,  நம்ம வீட்டு கல்யாணம் , கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தொகுப்பாளனி ரம்யா அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

4.அர்ச்சனா:

Advertisement

மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளினி அர்ச்சனா .இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக இருந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பிறகு ஜீ தமிழ் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.தொகுப்பாளினி அர்ச்சனாவினீத் முத்துகிருஷ்ணன்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

5.அஞ்சனா:

Advertisement

மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளினி அஞ்சனா. இவர் சன் மியூஸிக்கில் டிவியில்  தொகுப்பாளராக பணியாற்றி தனக்கான  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.  தொகுப்பாளினி அஞ்சனா ‘கயல்’ படத்தில் நடித்த கதாநாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

6.மணிமேகலை:

Advertisement

மிகவும் பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை. இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளனியாக பல வருடங்களில் பணியாற்றினார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினி  மணிமேகலை ஹுசைன்என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

7.கீர்த்தி:

Advertisement

கலைஞர் டிவியில்  ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி  தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தொகுப்பாளனி கீர்த்தி நடிகர் சாந்தனு பாக்யராஜ்என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

8.நக்சத்திரா நாகேஷ்:

Advertisement

மிகவும் பிரபலமான தொகுப்பாளினி நக்சத்திரா நாகேஷ்.இவர் சன் சிங்கர்,சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 8த் ஆனுவல் விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். தொகுப்பாளனி நக்சத்திரா நாகேஷ் ராகவ்  என்பவரை திருமணம் செய்து கொண்டார்

.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in