LATEST NEWS
காதல் தோல்வி அடைந்த டாப் 10 தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா?… இதோ ஒரு சிறப்பு தொகுப்பு…!!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் தங்களுடன் ஒன்றாக இணைந்து பணியாற்றுபவர்களுடன் காதலில் சிக்குவது,திருமணம் செய்து கொள்வது மற்றும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை என அனைத்தும் சாதாரணமாகிவிட்டது. அதேசமயம் ஒன்றாக நடித்து இன்று திருமணம் செய்து கொண்டுள்ள நடிகர் நடிகைகளும் ஏராளம். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் காதல் தோல்வி அடைந்த நடிகர்களும் பலரும் உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் காதல் தோல்வி அடைந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
நடிகர் விஷால்:
சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வளர்ந்து நிற்கும் நடிகர் தான் விஷால். இவர் முதலில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி காதலித்து வந்தார். அதன் பிறகு இருவரும் சில காரணங்களால் பிரிந்து விட்ட நிலையில் தன்னுடன் ஒன்றாக இணைந்து நடித்த லட்சுமி மேனனை விஷால் காதலித்து வருவதாக செய்தி வெளியானது.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹைதராபாத்தில் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான அணிஷா அலா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இறுதியாக திருமணம் நடைபெறாமல் இருவரும் பிரிந்து விட்டனர்.
நடிகர் சித்தார்த்:
ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் சித்தார்த். இவர் 2003 ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2007 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு தன்னுடன் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்த சோனா அலிகான் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தெரிந்து விட்ட நிலையில் 2011 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதிஹாசனை காதலித்தார்.
ஆனால் அவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்த நிலையில் பிறகு நடிகை சமந்தாவை சித்தார்த் காதலித்து வந்தார். இதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர சித்தார்த் தற்போது நடிகை அதிதிராவை காதலித்து வருகிறார்.
நடிகர் சிம்பு:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சிம்பு முதலில் நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இவர்களின் காதல் முறிந்தது.
பின்னர் சிம்பு நடிகர் ஹன்சிகாவை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது சிம்பு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
நடிகர் அஜித்:
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித் காதல் கோட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது நடுகை ஹிராவை காதலித்துள்ளார். அதன் பிறகு அவரை பெண்பார்க்கச் சென்றபோது அவரின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் அஜித்தின் காதல் முறிந்து போனது. பின்னர் தான் நடிகை ஷாலினியை காதலித்து அஜித்த திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் ரஜினி:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி முதலில் பஸ் கண்டக்டர் ஆக வேலை பார்க்கும் போது ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். ஆனால் அந்த காதல் முறிந்து போக மற்றொரு பெண்ணை காதலித்து அதுவும் முடிந்தது.
அதேசமயம் நடிகை சில்க் ஸ்மிதா மற்றும் அமலா ஆகியோருடன் ரஜினி ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பல செய்திகளும் அப்போது உலா வந்தன. இருந்தாலும் நடிகர் ரஜினி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் கமல்ஹாசன்:
உலக நாயகன் கமல்ஹாசன் 1970 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்தார். அதன் பிறகு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணம் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.
அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு சரிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுவும் விவாகரத்தில் முடிந்த நிலையில் நடிகை கௌதமையுடன் சில காலம் லிவிங் டு கெதர்ரில் வாழ்ந்து வந்தார். ஆனால் இறுதியாக அதுவும் முறிந்து போனது.
நடிகை திரிஷா:
தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்ட நடிகை திரிஷா முதலில் நடிகர் விஜய்யை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த திரிஷா நடிகர் ராணா ரகுபதி என்பவரை காதலித்து வந்தார்.
ஆனால் அந்த காதல் முறிந்ததால் இறுதியாக வருண்மணியன் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை இவர்களின் காதல் சென்றது. ஆனால் இறுதியாக அவரையும் பிரிந்து விட்டார்.
இசையமைப்பாளர் அனிருத்:
இவர் வாழ்க்கையில் ஒரே ஒரு காதல் இருப்பதாக மட்டுமே கூறப்படுகிறது. அதாவது நடிகை மற்றும் பாடகையான ஆண்ட்ரியாவை இவர் காதலித்து வந்த நிலையில் சில காலம் இவர்கள் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் இவர்களின் காதல் இறுதியில் தோல்வியில்தான் முடிந்தது.
நடிகர் தனுஷ்:
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் நடிகை ஸ்ருதிஹாசன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு அமலா பாலுடன் காதலின் இருப்பதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
