LATEST NEWS
புது பைக்கில் கணவருடன் லாங் டிரைவ் சென்ற விஜயலட்சுமி…. பைக்கின் விலையை கேட்டா தலையே சுத்துது…!!!
தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி தனது கணவர் பெரோஸ் வாங்கி இருக்கும் சொகுசு பைக்கில் லாங் ரைடு சென்று உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜயலட்சுமியின் கணவர் வைத்திருக்கும் பைக் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ள நிலையில் triumph rocketஎன்ற அந்த பைக்கின் விடை சுமார் 23 லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
