LATEST NEWS
இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர் ரகுமான் மகள்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!
இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதே சமயம் இரண்டு ஆஸ்கார் விருதை குறித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் இவர்தான்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ராம் பானு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அமீன் என்ற மகனும் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரின் மூத்த மகள் கதிஜாவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. ரியாஸ் என்ற சவுண்ட் இன்ஜினியர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதீஜா.
இந்நிலையில் சினிமாவிற்குள் மின்மினி என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தில் உள்ள புதிய மனிதா என்ற பாடலில் வரும் சிறிய வரிகளை இவர் தனது இனிமையான குரலில் ஏற்கனவே பாடியுள்ளார்.
அதேசமயம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலும் சின்னஞ்சிறு நிலவே என்ற பாடலை இவர்தான் பாடினார். இவரின் குரல் தனது தந்தையைப் போலவே இனிமையாக இருப்பதால் பாடகையாக இருந்து கஜிதா தற்போது இசையமைப்பாளராக மாறுகிறார்.
அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்பாவை போல் தானே பிள்ளையும் இருக்கும் என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
So happy to be working with this exceptional talent, Khatija Rahman for #MinMini. The euphonious singer is a brilliant music composer too. Some great music underway! ✨✨@RahmanKhatija @manojdft @Muralikris1001 @_estheranil_ @GauravKaalai @Pravin10kishore @raymondcrasta pic.twitter.com/b9k1YjuxtU
— Halitha (@halithashameem) June 12, 2023
