8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமான நடுகை நிஷா கணேஷ்…. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமான நடுகை நிஷா கணேஷ்…. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்..!!

Published

on

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தமிழில் அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.

அதனைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும் இவருக்கென தனி ஒரு புகழை தேடி தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இவரின் மனைவி தான் நிஷா.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் மறைமுகமானவர்தான் நிஷா. அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார்.இவன் வேற மாதிரி மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து தனக்கு கதாபாத்திரம் சரியில்லை என்று இவர் விலகினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணேசுக்கும் நிஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு இவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க இவர்களின் காதலும் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

Advertisement

அந்த குழந்தைக்கு சமைரா என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் நிஷா தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறி ஒரு அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in