சத்தம் இல்லாமல் மகாலட்சுமியை திருமணம் முடித்த… தயாரிப்பாளர் ரவீந்தரின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சத்தம் இல்லாமல் மகாலட்சுமியை திருமணம் முடித்த… தயாரிப்பாளர் ரவீந்தரின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரை சினிமாவில் தயாரிப்பாளராக தெரிந்ததை விட பலருக்கும் பிக்பாஸ் விமர்சனராக தான் நன்றாக தெரியும். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் அனைவரையும் விமர்சிப்பதில் வல்லவர்.

Advertisement

குறிப்பாக வனிதா விஜயகுமார் பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவரது விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

அதே சமயம் வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அப்போது ரவீந்தருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது.

Advertisement

அந்த சமயத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ரவீந்தர்தான் உறுதுணையாக இருந்து வந்து அவரின் குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்தார்.

தற்போது பல திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வரும் ரவீந்தர் கடந்த வருடம் சீரியல் நடிகை மகாலட்சுமியை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சின்னத்திரை சீரியல்கள் மூலமாக மிக பிரபலமான நடிகையான மகாலட்சுமி சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து அரசு என்ற சன் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி மற்றும் பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு அணில் என்பவரை திருமணம் செய்த நடிகை மகாலட்சுமிக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. ஆனால் முதல் கணவரை சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பிறகு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த வருடம் திருப்பதியில் இருவரும் திருமணம் முடித்தனர்.

Advertisement

இவர்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் பல கேலி கிண்டலுக்கு ஆளாகி சர்ச்சை கிளம்பியது.

இருந்தாலும் அனைத்திற்கும் கோபப்படாமல் பொறுமையாக விளக்கமளித்த இவர்கள் தற்போது எந்த கருத்துக்கும் செவிசாய்க்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

Advertisement

அடிக்கடி வெளியில் செல்லும் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தரின் குடும்பம் மற்றும் பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in