LATEST NEWS
“அடி செருப்பால”… ட்விட்டரில் கலாய்த்த ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த நடிகை குஷ்பு… அப்படி என்ன நடந்தது..??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உச்சம் பெற்றவர். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்த மக்கள் மத்தியில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே நடிகர் குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது குடும்பம் மற்றும் பாஜகவின் முக்கிய கட்சி உறுப்பினர் என பல பொறுப்புகளை பார்த்து வருகிறார்.
அதேசமயம் குஷ்பூ தேசிய மகளிர் அணி ஆணைய உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் மர்ம நபர் ஒருவர், உங்கள் கணவர் சுந்தர் சி.யின் பணத்தை காப்பாற்றிக்கொள்ள தானே நீங்கள் பாஜகவில் சேர்ந்தீர்கள் என்று கேலியாக பேசியுள்ளார்.
இதை கண்டு கோபமடைந்த குஷ்பூ வெளியிட்டுள்ள twitter பதிவில், அடி செருப்பால,உங்கள் வியாபாரத்தை காப்பாற்ற உங்கள் பெண்களை நீங்கள் வீட்டில் இப்படி பயன்படுத்துவீர்களா? என்று கூறி கண்டிக்கும் விதமாக பதிலடி கொடுத்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Adi serippaale. You probably use your women at home to save your business. Bloody shameless losers.
— KhushbuSundar (@khushsundar) June 15, 2023
