திடீரென ஹைதராபாத் புறப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் குழு… எதற்கு தெரியுமா?… வெளியான புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென ஹைதராபாத் புறப்பட்ட பாக்கியலட்சுமி சீரியல் குழு… எதற்கு தெரியுமா?… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார்.

அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

Advertisement

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கராபரணம் ராஜலட்சுமி அம்மாவின் மகன் திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

அவரின் திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா, திவ்யா கணேஷ், மேஹா, உள்ளிட்ட பலரும் சென்று உள்ளனர்.

Advertisement

தற்போது அது தொடர்பான புகைப்படங்களை கம்பன் மீனா இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in