LATEST NEWS
சூர்யாவை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரபலத்துக்கு வாட்ச் பரிசளித்த கமல்… யாருக்கு தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க..!!
பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகின்றார். லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் சங்கருக்கு கமல்ஹாசன் ஒரு ஆடம்பர பரிசை வழங்கியுள்ளார்.
அதாவது இயக்குனர் சங்கருக்கு கமல்ஹாசன் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். இதற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நிலையில் கமல்ஹாசன் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார்.
தற்போது சூர்யாவை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் முன்பே சங்கருக்கு கமல்ஹாசன் ஆடம்பரமான வாட்சை(Panerai brand watch) பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் @shankarshanmugh
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி.… pic.twitter.com/Mo6vDq7s8B
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2023
இதற்கு நன்றி தெரிவித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு,
My heart is filled with gratitude and joy sir.I will never stop giving it my best! And needless to say, your performance and presence brought an essential essence to the film. Thank you for the token to commemorate this very special moment. I will cherish this feeling 🙏… https://t.co/mN9WFuC4No
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 28, 2023
