LATEST NEWS
53 வயதில் மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடிய தில் ராஜூ… வெளியான அழகிய புகைப்படம்…!
தெலுங்கு திரைத்துறையில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தில் ராஜு. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் நித்தின் நடிப்பில் வெளியான தில் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இதனிடையே தில் ராஜு அனிதா என்ற பெண்ணை ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஹர்ஷிதா என்ற ஒரு மகளும் மகள் வலி பேரக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அனிதா உயிரிழந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு தில் ராஜு வைக்கியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் மாதம் அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு அன்வி ரெட்டி என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய 53 வது வயதில் இரண்டாவது மனைவியுடன் மகனின் முதல் பிறந்த நாளை தில் ராஜு கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ఘనంగా దిల్ రాజు కొడుకు బర్త్డే..హాజరైన ప్రముఖులు #DilRaju #DilRajuSonBirthday #MegastarChiranjeevi #MaheshBabu #Tollywood pic.twitter.com/O01IIjM4E1
— ABP Desam (@ABPDesam) June 30, 2023
