LATEST NEWS
என்னிடமிருந்து எஸ்கேப் ஆன ஒரே நடிகர் இவர்தான்… பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை லைலா..!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்தவர் தான் நடிகை லைலா. எப்போதும் சிரித்த முகம், கன்னக்குழி அழகு, துறுதுருப்பான நடிப்பு, கவர்ச்சி காட்டாத கண்ணியமான கதாபாத்திரங்கள் என தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் வெகுவாக கவர்ந்தவர்.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார். தமிழ் படங்களில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இன்று வரை இவர் தக்க வைத்துள்ளார். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் லைலா சிறந்த நடிகைக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.
குறிப்பாக சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு அதில் இவரின் நடிப்பு இன்றும் பேசப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தீனா, முதல்வன், ரோஜாவனம், உன்னை நினைத்து, பார்த்தேன் ரசித்தேன்,அள்ளித்தந்த வானம் மற்றும் நந்தா உள்ளிட்ட பல திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் திருமணத்திற்கு முன்பு இறுதியாக அஜித்தின் திருப்பதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை லைலா இளைய தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயுடன் இதுவரை நடிக்கவில்லை. தன்னிடமிருந்து எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ விஜய் என கூறி நடிகை லைலா ஒரு பதிவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் உன்னை நினைத்து திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக நடிக்க இருந்தவர் விஜய் தானாம்.
லைலா உடன் இணைந்து போட்டோ சூட் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் திரைப்படத்திலிருந்து திடீரென விஜய் விலகி விட்ட நிலையில் அதற்கு பதிலாக சூர்யா நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது லைலா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
