LATEST NEWS
நடிகர் சிம்புவின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிலம்பரசன். இவருடைய முழு பெயர் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர்.
இவரை சிம்பு அல்லது எஸ் டி ஆர் என்று செல்ல பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்தார்.
இவர் தந்தை டி ராஜேந்தர் தாய் உஷா. இவர் தந்தையும் ஒரு நடிகர். இவர் சென்னையில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார் .
பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார் . இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் முதல் தாய் தங்கை பாசம் , ஒரு வசந்த கீதம் , என் தங்கை கல்யாணி , எங்க வீட்டு வேலன் , மோனிஷா என் மோனாலிசா,
ஒரு தாயின் சபாதம் , சம்சார சங்கீதம் , சாந்தி என்னது சாந்தி , திருப்பாவை சாந்தி , பாபு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் கோவில் ,குத்து ,மன்மதன் ,வல்லவன் ,ஒஸ்தி, சிலம்பாட்டம், வாலு, ஈஸ்வரன், மாநாடு ,வெந்து தணிந்தது காடு,
10 தலை, போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் போன்ற பன்முக திறமைகளை கொண்டவர்.
நடிகர் சிலம்பரசன் தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக அடிக்கடி பாடியுள்ளார். இவர் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
2010 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாருக்கான எஸ் SIIMA விருதையும் பெற்றார்.
‘விண்ணைத்தாண்டி’ வருவாயா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விஜய் விருதை பெற்றார். அதே படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
தற்போது இவரின் பலரும் பார்த்திராத புகைப்படமா னது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
