“மலையில் ஏறிய மோப்ப நாய்… 50 ட்ரோன்கள்..!” மாயமான 7 வயது சிறுமிக்காக நடக்கும் மெகா தேடுதல் வேட்டை.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!! – cinefeeds
Connect with us

CRIME

“மலையில் ஏறிய மோப்ப நாய்… 50 ட்ரோன்கள்..!” மாயமான 7 வயது சிறுமிக்காக நடக்கும் மெகா தேடுதல் வேட்டை.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியினரின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்றைய தினமே மர்மமான முறையில் மாயமாகியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அன்று இரவு பெற்றோருடன் படுத்துத் தூங்கிய சிறுமியை, மறுநாள் அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வருகின்றனர்.

சிறுமி ஹேமாவதியைக் கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 6 நாட்களாகத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், இன்று 7-வது நாளாகத் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு, ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று விவரங்களைச் சேகரிப்பதோடு, வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினரும், சிறுமியின் வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் தீவிரமாகத் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சிறுமியை மீட்க நவீனத் தொழில்நுட்பங்களும், பல்வேறு உத்திகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டை சுற்றியுள்ள விவசாய விளைநிலங்கள், முட்புதர்கள், ஏரி, குளங்கள், மலைக்குன்றுகளில் உள்ள குகைகள் மற்றும் பாறைகளின் இடுக்குகளைக் கண்காணிப்பதற்காக 50 ட்ரோன்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆலம்பூண்டி மலைமீது மோப்பநாய் உதவியுடன் 20 போலீசார் தேடி வரும் வேளையில், தீயணைப்புத் துறையினர் சுற்றுப்புற கிராமக் கிணறுகளில் இறங்கித் தேடுகின்றனர். அதுமட்டுமின்றி, மரக்காணத்தில் இருந்து மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சுருக்குமடி வலைகள் கொண்டு வரப்பட்டு, அதிக ஆழமுள்ள பெரிய விவசாயக் கிணறுகளில் வலைவீசியும் சிறுமியைத் தேடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in