நெல்லை போலீஸ் அதிரடி.. இன்ஸ்டா பிரபலம் மதுமிதா மீதான நகை திருட்டு புகார்… காண்டிராக்டருக்கு பறந்த 2-வது சம்மன்..!! – cinefeeds
Connect with us

CRIME

நெல்லை போலீஸ் அதிரடி.. இன்ஸ்டா பிரபலம் மதுமிதா மீதான நகை திருட்டு புகார்… காண்டிராக்டருக்கு பறந்த 2-வது சம்மன்..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், ஏராளமான தங்க நகைகளை அணிந்தவாறும், பணக்கட்டுகளைக் கைகளில் வைத்தவாறும் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டுப் பரவலாக அறியப்பட்டவர். கடந்த மாதம் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 98 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதா மீது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காண்டிராக்டர் ஒருவர் பரபரப்பான திருட்டுப் புகார் ஒன்றை அளித்துள்ளார். நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து (35) என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு மதுமிதா தன்னிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றதாக ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், இந்த வழக்கு தாலுகா போலீசாருக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதுகுவலி சிகிச்சைக்காகப் பிசியோதெரபிக்குச் சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகப் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார். கடந்த 2022-ல் நெல்லை வந்திருந்தபோது உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதியில் காரில் வைத்துத் தனக்கு மசாஜ் செய்த மதுமிதா, தனது 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றதாகப் பேச்சிமுத்து குற்றம் சாட்டியுள்ளார். இதன் பேரில் திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், வாக்குமூலம் அளிக்க காண்டிராக்டர் பேச்சிமுத்துவுக்கு இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, மதுமிதாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனப் போலீசார் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in